பள்ளி, கல்லூரி நவ.16இல் திறப்பு ஊரடங்கு நவ.30 வரை நீட்டிப்பு

சென்னை,நவ.1, கரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நவம்பர் மாதம் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? மற்றும் புதிய தளர்வுகள் குறித்து  தமிழக அரசு நேற்று (அக்.31) பல்வேறு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.


இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி   வெளியிட்டுள்ள அறிக்கை:


 கடந்த 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், 31.10.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 30.11.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:


9,10,11,12ஆம் வகுப்புகள் மட்டும்


பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவ னங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வருகிற 16ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக் கப்படும். பள்ளி/கல் லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வருகிற 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


சென்னையில், தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் நாளை (2ஆம் தேதி) முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபார கடைகள் மூன்று கட்டங்களாக 16.11.2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


புறநகர் மின்சார ரயில் சேவை


பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக் குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


கலாச்சார நிகழ்வுகள்


மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் வருகிற 10ஆம் தேதி முதல் 100 பேர் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சி யகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் வருகிற 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப் படுகிறது.


பேருந்து போக்குவரத்து


வெளி மாநிலங்களில் இருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக் கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ப வர்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.


* தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய் தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Comments