லக்னோ, நவ.14 பீகார் தேர்தலில் அய்தராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.அய்.எம்.அய்.எம். கட்சி சிறிய கட்சி களுடன் கூட்டணி அமைத்துப் போட்டி யிட்டு 5 இடங்களில் வென்றது.
ஒவைசி கட்சி வாக்குகளைப் பிரித்ததால், பா.ஜக, கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் உருது கவிஞர் முன்னாவர் ராணா, “பா.ஜ.க.வின் எடுபிடியாகச் செயல்படும் ஒவைசி, இஸ்லாமியர்களைப் பிளவு படுத்தி பா.ஜ.க. அரசியல் லாபம் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்தியாவைப் பிரித்த முகமது அலி ஜின்னாவை போன்றவர், ஒவைசி” என்று குறிப்பிட்டுள்ள கவிஞர் முன்னாவர் “இந்தியாவில் இன்னொரு ஜின்னா உருவாவதை இஸ்லாமியர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.
“மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனது 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக அசாதுதீன் ஒவைசியும், அவரது சகோதரர் அக்பருடனும், அப்பாவி முஸ்லிம்களைத் தவறாக வழி நடத்திச் செல் கின்றனர்” என்று தெரிவித்த கவிஞர் முன்னாவர் “ஒவைசி, பா.ஜக.,வின் ஏஜெண்ட்” என்று காட்டமாகக் கூறினார்.