தொடரும் கனமழை: வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர்; 14 ஏரிகள் நிரம்பி அடையாற்றில் வெள்ளம்


சென்னை, நவ. 17- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது.


சென்னையில் நேற்று (16.11.2020) காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பர வலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கியது. இதனால் தீபாவளி விடுமுறை முடிந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.


சென்னையை சுற்றி உள்ள தாம்பரம், முடிச்சூர், காட்டாங் குளத்தூர், குன்றத்தூர், மாங் காடு,  ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதல் மழை பெய்து வரு கிறது. இதனால் பகல் பொழுதி லேயே வானம் இருட்டியது. பகல் இரவு போல மாறியது.


தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.


சென்னையை அடுத்து காட் டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக் கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


சென்னை புறநகர் பகுதியான இரையூர், செம்பாக்கம், நத்தப் பேட்டை, வையூர், புக்காத்துறை, கொளப்பாக்கம், தாத்தனூர், குண்டுபெரம்பேடு, அரனேரி, நன்மங்கலம், புலிக்கொரடு, எம்.என்.குப்பம், பட்டறைகழனி, வையூர் புல்லிட்டின் தாங்கல் ஆகிய 14 ஏரிகளும் தொடர் மழை யால் நிரம்பி உள்ளன.


அந்த ஏரிகளில் இருந்து வெளி யேறும் தண்ணீர் கலப்பதால் அடை யாற்றிலும் நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை நகரின் ஊடாக ஓடும் அடையாறில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரத்தில் இருப் போர் பாதுகாப்பாக இருக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.அடை யாறு கரையோரம் உள்ள வரத ராஜபுரம், லட்சுமி நகர், முடிச்சூர், பி.டி.சி. குடியிருப்பு, மணிமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து தாழ்வான இடங் களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.


இதனிடையே, முடிச்சூர் அருகே அடையாற்றில் ஆகாயத் தாமரை படர்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவானது. இதை யடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஆகாயத்தாமரை செடி களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


குடிநீர் இருப்பு


அதிகரிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சென் னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மட்டும் இரண்டாயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி யில் இருந்து புழல் ஏரிக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மிகக் குறைந்த அளவாக 142 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டி ஏரியில் அதன் முழுக்கொள்ளளவில் பாதியளவே தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர், மழை நீர் என ஏரிக்கு ஆயிரத்து 150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.


Comments