உவமைக் கவிஞர் சுரதா 100 ஆம் ஆண்டு விழா கழகம் சார்பில் விழா எடுப்போம்!


உவமைக்கவிஞர் சுரதா திராவிடர் இயக்கம் தந்த ஒப்பற்ற கவிஞர் - கொள்கை அடிப் படையில் நாத்திகர் என்பதை பிரகடனப்படுத்தத் தயங்காதவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயரான கனக சுப்புரத்தினத்தின் (‘‘சுப்புரத்தின தாசன்'' என்பதன்) சுருக்கம்தான் சுரதா.  அவரது நூற்றாண்டு தொடக்கத்தில் அவரை வாழ்த்துவோம்!


திராவிடர் கழகம் சார்பில் கவிஞர் சுரதா நூற்றாண்டு - இந்த ஆண்டுக்குள் சிறப்பாக நடத்தப் பெறும்.


‘சுரதா' என்றும் வாழும் கவிஞர்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


23.11.2020


Comments