அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக  1,912 பேர் கைதாகி விடுதலை; 1,027 வழக்குகள் பதிவு

சென்னை,நவ.16 தீபாவளி அன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒரு நாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது.


தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஆயிரத்து 912 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 1,027 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


சென்னையில் 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்ததாக மதுரையில் 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் 29 வழக்குகளும், தூத்துக் குடியில் 108, ராமநாதபுரத்தில் 5, தேனியில் 8, திருச்சியில் 40, கோவையில் 12 வழக் குகள் என தமிழகம் முழுவதும் 1,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


ஆயிரம் ரூபாய் அபராதம்


இந்த வழக்குகளில் மொத்தம் ஆயி ரத்து 912 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் உடனடியாக விடுதலை செய் யப்பட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் மூலம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக் கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.


இதையடுத்து, சென்னையில் அனு மதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப் பவர்களைக் கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்காவல்துறையினருக்குஉத்தர விட்டார். அதன்படி, அனைத்து காவல் நிலையஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப் படை காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இதையடுத்து நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக, சென்னை பெரு நகர காவல் வடக்கு மண்டலத்தில் 37 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 95 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 239 வழக்குகளும் என மொத்தம் 428 வழக்குகள் புதிவு செய்யப்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்கும்போது 106 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், சென்னையில் 38 பேர் காயம் அடைந் துள்ளனர்.


Comments