தமிழகத்தில் புதிதாக 1,725 பேருக்கு கரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு


சென்னை, நவ. 17- தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர் பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட் டுள்ள தகவலின்படி, தமிழ கத்தில் 16.1.2020 அன்று 1,725 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 916 ஆக அதிகரித் துள்ளது.


வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 2 ஆயி ரத்து 384 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் தமிழ கத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 32 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.


ஆனாலும் வைரஸ் தாக் குதலுக்கு நேற்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது.


Comments