ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கிக்கு நமது வீர வணக்கம்


ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 18.11.2020 அன்று மாஸ்கோவில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம். வயது 79இல் அவர் கரோனா  காரணமாக மரணமடைந்துள்ளார்!


ஏறத்தாழ 50 ஆண்டுகளாக ஒரு தனி மனிதராக நின்று  - தனிமரம் தோப்பாகும் என்று காட்டும் தன்னிகரற்ற தமிழ்ப் பரப்பும் தமிழ்த் தொண்டினை அமைதியாக ஆரவாரமின்றி நடத்தி வந்தார். தமிழ்நாட்டுக்கு நல் அறிமுகமாகி 10 பல்கலைக் கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்த மாபெரும் சாதனையாளர், சீரிய தமிழ்த் தொண்டர்!


ரஷ்ய கலாச்சார மய்யத்தின் செயல் வீர செம்மல் தோழர் தங்கப்பன் அவர்கள் மூலம் அவர்பற்றி நாம் அறிவோம்!


பெரியார் - மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் முன்பு ரஷ்ய மொழி கற்பித்தப்போது அவர் ஒரு செயலூக்க சிந்தனையாளராகவே எமது அமைப்பிற்குத் தென்பட்டார்.


அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் எளிதில் நிரப்பப்பட முடியாது!


ரஷ்ய தமிழறிஞர்  துப்யான்ஸ்கிக்கு அப்பல்கலைக் கழகம் தக்க மரியாதை செய்யும்.


அவருக்கு நமது வீர வணக்கம்.


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


19.11.2020


Comments