நாத்திக எதிரிகள் யார்

நாத்திக எதிரிகள் யார்?


நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச் சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது  ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி எந்தக் கூட்டத்திற்காவது சிறிது அதிருப்தி இருக்கும் என்று கருத வேண்டுமானால், அது, போதிய கல்வி அறிவு பெறாத சமுகமும், முரட்டுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வரும் பிடிவாத சமுகமும், தங்களைத் தவிர வேறுவித உலக அபிப்பிராயம் இருக் கின்றது என்றுகூட உணர முடியாமல் வைக்கப்பட்டிருக்கும் பாமரக் கூட்டச் சமுகமும் ஆகியவர்களுக்குள்ளாக இருந்து வரலாம்.     


('குடிஅரசு' 10.9.1933)


Comments