அரசு இலவசமாக கொடுத்த அரிசியை பதுக்கி வைத்த அரே கிருஷ்ணா இயக்கத்தினரின் இஸ்கான் கோவில் நிர்வாகம்

விசாகப்பட்டினம், நவ. 23- விசாகப்பட்டினத் தில் உள்ள இஸ்கான் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மாணவர்கள் மதிய உணவுக்கான 19.8 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


விசாகப்பட்டினத்தில் சாகர்நகர் பகு தியில் அமைந்துள்ள அரே கிருஷ்ணா இயக்கத்தினரின் இஸ்கான் கோவிலின் மூலம் 67 அரசுப்பள்ளிகளில் பயிலும் 13000க்கும் அதிகமான மாணவர்களுக் கும் அரசு உதவி பெறும் 61 பள்ளிகளில் பயிலும் 1850 மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது.   இதற்கான அரசியை அரசு இலவசமாக வழங்கி வருகின்றனர்.  இந்த அரிசி பதுக்கப்பட்டு முறைகேடாக விற்கப்படு வதாக ரகசியத் தகவல்கள் வந்துள்ளன.


இதையொட்டி புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குழு கோவில் வளாகத்தில் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.  அப்போது கோவிலில் உள்ளே ஒரு லாரியில் சுமார் 5.5 டன் எடை உள்ள 110 அரிசி மூட்டை கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது.   இந்த அரிசியின் மதிப்பு ரூ.5.94 லட்சம் ஆகும்.  இது குறித்து லாரி உரிமையாளர் மற்றும் அவர் உதவியா ளரிடம் விசாரித்த போது இவை மதிய உணவுக்கு அளிக்கப்பட்ட அரிசி என வும் வேறு பைகளில் மாற்றப்பட்டு காக்கி நாடா எடுத்துச் செல்ல உள்ளதும் தெரிய வந்தது.


இந்த 110 மூட்டையைத் தவிர 286 மூட்டைகளும் லாரிகளில் ஏற்றி அனுப் பத் தயார் நிலையில் இருந்துள்ளன.  இந்த அரிசி உணவு பங்கீட்டுத் துறையில் இருந்து வந்த சாக்கு மூட்டைகளில் இருந்து வேறு ஒரு பிளாஸ்டிக் மூட் டையில் அடைக்கப்பட்டிருந்தன.  இந்த வளாகத்தில்  மொத்தம் இது போல் 19.8 டன் அரிசி வேறு இடங்களுக்கு மாற்ற வசதியாக வேறு மூட்டைகளில் அடைக் கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.  இந்த அரிசி மூட்டைகள் மற்றும் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   பிளாஸ்டிக் மூட்டையில் காக்கிநாடா வைச் சேர்ந்த ஒரு நிறுவனப் பெயர் இருந்தது.


அதிகாரிகளின் விசாரணையில் இஸ் கான் மதிய உணவு வழங்கி வரும் பணி யைச் செய்து வந்ததும் ஆனால் 2019 மார்ச் முதல் அரிசி இருப்பு குறித்து எவ் வித ஆவணமும் வைத்து இல்லாததும் தெரிய வந்துள்ளது.  உணவு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் 2019 பிப் ரவரிக்குப் பிறகு எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   இதையொட்டி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு உணவு பங்கீட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.


சில நாட்களுக்கு முன்பு இந்த அமைப்பின் தலைமையிடமான பெங் களூருவில் பெரும் ஊழல் நடந்ததாக அதன் தலைமை உறுப்பினர்கள் பதவி விலகிய நிலையில் தற்போது அரிசி கடத்தலிலும் இஸ்கான் அமைப்பு சிக்கி யுள்ளது.


Comments