உ.பி., குஜராத்போல பீகாரிலும் முஸ்லிம் இல்லாத அமைச்சரவை

இந்துராஜ்ஜியம் வந்துவிட்டதா?பாட்னா, நவ.19 உத்தரப்பிரதேசம், குஜராத்தைப் போல பீகாரிலும் முஸ்லிம் இல்லாத அமைச் சரவை அமைக்கப்பட்டுள்ளது.


நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக பீகாரில் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்திலி ருந்து  ஒரு  சட்டமன்ற உறுப்பினர்  கூட இல்லாமல் ஆளும் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.


தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளில், பாஜக, அய்க்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் வீகாசில் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளில்  இஸ்லாமிய சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் கூட இல்லை.


மக்கள் தொகையில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக...


பீகார் மாநிலத்தின் மக்கள் தொகையில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நான்கு கட்சிகளிலும் அய்க்கிய ஜனதா தளம் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்கள் 11 பேரை தேர்தலில் போட்டியிட வைத்தது, ஆனால், அந்த 11 பேரும் தோற்றனர் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.


வெற்றிக் கூட்டணியில் உள்ள இந்த 4 கட்சிகளை தவிர, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தின் 75 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 இஸ் லாமியர்கள், காங்கிரஸ் கட்சியில் உள்ள 19 உறுப்பினர்களில் 4 இஸ்லாமியர்கள்,  அசா துதீன் ஓவைசி கட்சியில் வெற்றிபெற்ற அய்வருமே இஸ்லாமியர்கள், இடதுசாரிக் கட்சிகளில் இருக்கும் 16 பேரில் ஒருவர் இஸ்லாமியர், பகுஜன் சமாஜ் கட்சியில் வென்ற ஒருவர் இஸ்லாமியராக உள்ளனர். ஆனால், ஆளும் கூட்டணியில் மட்டும் இஸ் லாமியர்கள் இல்லை.


இதனால் தற்போது ஏழாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் நிதிஷ்குமார் ஆட்சியில், மக்களால் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட இஸ்லாமியர் யாருமே இல் லாமல் அமைச்சரவை குழுவை உருவாக்க வேண் டியுள்ளது.


 மோடி 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது நாடு முழுவதுமே ஒரு சிறுபான்மையினர் கூட பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அதேபோல் குஜராத், அரியானா, மராட்டியம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜார் கண்ட் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு இஸ்லாமியரைக் கூட நிறுத்தவில்லை. 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக இஸ்லாமியர்கள் யாருக்கு வாய்ப்பு தரவில்லை.


ஆனால் பேச்சில் மட்டும் ‘சப்கா சாத் சப்கா விகாஸ்‘ (அனைவரோடு இணைந்த வளர்ச்சி) என்று கூறி வருகிறார்.


Comments