ஏட்டுத் திக்குகளிலிருந்து...

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • பீகார் சட்டசபைத் தேர்தலில் அஞ்சல் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் மறுத்தால், நீதிமன்றத்தை நாட ஆர்.ஜே.டி. கட்சி முடிவு செய்துள்ளது. பன்னிரெண்டு தொகுதிகளுக்கு மேல், அஞ்சல் வாக்கு எண்ணிக்கை மோசடியால் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததாக ஆர்.ஜே.டி. குற்றம் சாட்டியுள்ளது.


தி டெலிகிராப்  • மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு மும்பை தலோஜா சிறையில் இருக்கும் 83 வயது பாதிரியார் ஸ்டான் சுவாமி, 13 அடி நீளம், 8 அடி அகலம் உள்ள சிறையின் அறையில் மேலும் இரண்டு பேருடன் இருப்பதாகவும், பார்க்கின்சன் வியாதியால் அவதிப்படும் அவருக்கு, அங்குள்ளவர்கள் உதவி செய்வதையும் குறிப் பிட்டு, சிறையில், மனிதாபிமானம் குமிழ்ந்துள்ளது என உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

  • பழங்குடி மக்களின் உரிமைக்காக கடந்த அய்ம்பது ஆண்டுகளாக பாடுபடும் பாதிரியார் ஸ்டான் சுவாமியின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். அவரை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம், அரசை விமர்சனம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என தேசிய புலனாய்வு முகமை அனைத்து போராட்டக்காரர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறது என ஜார்கண்ட மாநில நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் குமார் ஹன்சக், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

  • மேனாள் குடியரசுத் தலைவர் ஜியானி ஜெயில்சிங், பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஆகியோர் ஹிந்துக்கள் அல்ல என்று கூறி கோயில் உள்ளே அனுமதி மறுத்த குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம், தற்போது, கோயில்களில் திமிலா என்ற இசைக் கருவியை தொடர்ந்து இசைத்து வரும் சந்திரன், தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோயில் உள்ளே இசை அமைக்க அனுமதி மறுத்துள்ளது.


டைம்ஸ் ஆஃப் இந்தியா:  • அனைத்தும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல, பகுப்பாய்வு மற்றும் காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. நாம் விஞ்ஞானிகளின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தலாய் லாமா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


டெக்கான் ஹெரால்டு:  • காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பாஜக-


ஆர்.எஸ்.எஸ்.அய். வீழ்த்த வேண்டும் என நேரு பிறந்த நாள் விழாவில் கர்நாடக எம்.பி. மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.  மேலும், ஆகவே, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ஜோஸ்யத்தில் நம்பிக்கை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, நேரு மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர் என்றும் சுட்டிக்காட்டினார். ராஜராஜேஷ்வரிநகர் இடைத் தேர்த லில் ஜோஸ்ய அடிப்படையில் வேட்பாளரை தேர்ந்தெடுத்து, அவர் தோல்வியுற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


- குடந்தை கருணா


15.11.2020


 


Comments