அய்தராபாத்,ஆக.30- அறிகுறி இருப்பவர்களை விடவும், அறிகுறியே இல்லாத நோயா ளிகள்தான் மிகப்பயங்கர தொற்றைப் பரப்புபவர்களாக இருப்பதாகவும், அதனால் தான் கரோனா இந்த அள வுக்கு வேகமாகப் பரவி வரு வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேசிய பயாலஜிகள் சயின்ஸ் மய்யம் மற்றும் நிஜாம் மருத்துவ அறிவியல் மய்யத்துடன் இணைந்து அய்தராபாத்தைச் சேர்ந்த மரபணு கைவிரல் ரேகை மற்றும் சோதனை மய்யம் (சிடிஎஃப்டி) நடத்திய ஆய் வில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் குறைந்த உயிரிழப்பு மற்றும் அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளிடம் இருந்து தொற்று அதிகம் பரவுவது போன்றவை குறித்து புதிய தகவல்கள் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய் யும் மய்யமாகவும் இந்த சிடி எஃப்டி உள்ளது.
இந்த ஆய்வில், கரோனா அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகளில்தான் அதிகள வில் கரோனா தொற்று இருப் பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், கரோனா தொற்றுக் கான அறிகுறியுடன் வந்து சளி மாதிரிகளை பரிசோத னைக்கு கொடுக்கும் நோயா ளிகளின் சளி மாதிரியில் குறைந்த அளவிலேயே கரோனா தொற்று காணப்படு கிறது. இந்தியாவில் அதிகள விலான கரோனா தொற்றா ளர்கள் அறிகுறி இல்லாதவர் களாகவே உள்ளனர்.
அதே சமயம், சிடிஎஃப்டி மேற்கொண்ட கரோனா பரி சோதனைகளில் பெரும்பா லானோர் கரோனா அறிகுறி இல்லாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கரோனா பாதித்து அதே சமயம் அறிகுறியே இல்லாத வர்கள்தான் நாட்டில் அதி கம் என்றும், அவர்கள்தான் அறிகுறி இருப்பவர்களைக் காட்டிலும் அதிக கரோனா தொற்றைக் கொண்டிருக்கி றார்கள் என்றும் சிடிஎஃப்டி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால்தான், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து, அதே சமயம், உயி ரிழப்பவர்களின் எண்ணிக் கைக் குறைவாக உள்ளதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
இது கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற் கொள்ளப்படும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment