செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

புதுடில்லி,ஆக.30, பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள் ளது.  இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்துள்ளது.  ஊரடங்கில் 4ஆம் கட்ட தளர் வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ஆம் தேதி முதல் செயல்படும். செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சி களை 100 பேருடன் நடத்த அனுமதி.


கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொது முடக்கத்தை அமல்படுத்த கூடாது. வெளிநாட்டு விமான சேவை களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது.


செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திரையரங்குகள் செயல்பட அனுமதி.  செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம். செப்டம்பர் 21ஆம் தேதி பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடந்த 50விழுக்காடு ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம்.


மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment