தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் "விடுதலையின் விளைச்சல்" சிறப்புக் கூட்டம் (காணொலி) 'விடுதலை' இல்லை என்றால் நம் இனத்துக்கு விடுதலை இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 31, 2020

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் "விடுதலையின் விளைச்சல்" சிறப்புக் கூட்டம் (காணொலி) 'விடுதலை' இல்லை என்றால் நம் இனத்துக்கு விடுதலை இல்லை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரை



தஞ்சாவூர், மே 31 30-.05.-2020 சனி மாலை 6.45 முதல் 8.45மணி வரை காணொலி வழியாக 2020- ஜுன்.1, 86-_ஆம் ஆண்டில் விடுதலை "விடுதலையின் விளைச்சல் "சிறப்புக் கூட்டம்" நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் அ. அருணகிரி வரவேற்று உரையாற்றினார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் கழகக் காப்பாளர் வெ.ஜெயராமன்,  மண்டலத் தலைவர்மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பங்கேற்று, கரோனாதொற்றால் ஊரே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் கழகத் தலைவர் விடுதலை பணியாளர்கள் ஆகியோரின் முயற்சியால் விடுதலை நாளிதழ் நமக்கு தினந்தோறும் எந்தவித தடையுமின்றி வந்தடைகிறது.எண்பத்தைந்து ஆண்டு காலம் பல்வேறு விதமான நெருக்கடிகளை சந்தித்து சாதனை படைத்தவிடுதலை நாளிதழ் தலைமைக்கும் தோழர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. வருகிற ஜூன் ஒன்றாம் தேதிமுதல்விடுதலை நாளிதழ் தனது  86 ஆம் ஆண்டை தொடங்கவிருக்கிறது. விடுதலையில் அன்றாடம் பல்வேறு கருத்துக்கள் அடங்கிய ஆசிரியர் அறிக்கை, கழகத் தோழர்களின் கட்டுரைகள், தலையங்கங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஞிதி வடிவில் வரும்விடுதலை நாளிதழை கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய நண்பர்கள் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிஅவர்களை விடுதலை வாசகர்களாக விடுதலை விரும்பிகள் ஆக்குவதே நம்முடைய கடமை இந்த நேரத்தில் இதை நாம் செய்தால் பிற்காலத்தில் விடுதலை வாசகர்களை அதிகப்படுத்த முடியும், விடுதலை விளைச்சலைபெருக்க முடியும், தோழர்கள் அனைவரும் இதனை தங்களது அன்றாட கடமையாக நினைத்து செய்திட வேண்டும் அப்போதுதான் இயக்கம் வலிமை பெறும், தந்தை பெரியார் அவர்கள் காண விரும்பிய சமுதாயத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் செய்து முடிக்க இதுவே நல்ல தருணம் என்று கூறி தொடக்க வுரையாற்றினார்.


'விடுதலை' பொறுப்பாசிரியர்,


கழகத் துணைத் தலைவர் உரை


எத்தனையோ நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.காரணம் விடுதலை என்பது நம்முடைய தாய்ப்பால் ஆகவே அதனுடைய விளைச்சல் என்கின்றநிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விடபெருமைக்குரிய நிகழ்ச்சி ஒன்று இருக்க முடியாது. 85 ஆண்டுகள், இந்த 85 ஆண்டை திருப்பி போட்டால் 58 ஆண்டுகள் ஆகும். ஆசிரியர் நம் முடைய ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். உலக வரலாற்றிலேயே 58 ஆண்டு காலம் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த சாதனைக்கு சொந்தக்காரர் நம்முடைய ஆசிரியர். மேலும் விடுதலையின் நூறாம் ஆண்டு விழாவிலும் ஆசிரியர் அவர்கள் இருந்து நம்மை வழிநடத்துவார் இதில் எந்தவித அய்யப் பாட்டுக்கும் இடமில்லை. விடுதலையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து குருசாமி அவர்கள் விலகிய பொழுது தந்தை பெரியார் விடுதலை பத்திரிக்கையை வாரப் பத்திரிகையாக மாற்றிவிடலாம் என்ற நிலைக்கு வருகிறார்,  எதற்கும் கடலூரில் சிறந்த வழக்கறிஞராக வளர்ந்து கொண்டிருக்கிற கடலூர் வீரமணி அவர்களிடம் கேட்கலாம் என்று ஒரு தந்தி செய்தி அனுப்புகிறார், உடனே அவர் அய்யாவை சந்திக்க வருகிறார்,  அய்யா அவர்கள் விடுதலையின்நிலைமையை கூறுகிறார். ஆசிரியர் உடனே ஏனய்யா இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் விடுதலையை தொடர்ந்து நடத்துகிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய தலைவர் ஆசிரியர்அவர்களிடம் கேட்கிறார்கள். உடனடியாக ஆசிரியர் அவர்கள் நான் சென்னையில் வந்து வழக்குரைஞர் பணியையும் பார்த்துக்கொண்டு, விடுதலையில் ஆசிரியர் பணியையும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னபொழுதுதந்தை பெரியார் அவர்கள் அது சரியாக வராது முழுநேர ஆசிரியராக இருந்து பணியாற்ற வேண்டும் என்று சொன்ன நேரத்தில், உடனடியாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் 'விடுதலை' ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  விடுதலையின் நிறுவனர் தந்தை பெரியாராக இருந் தாலும், இன்றைக்கு விடுதலை நாளேடாக தொடர்ந்து வெளிவருகிறது என்றால் அதற்கு காரணம் நம் முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு தமிழர்கள் சார்பில்  நம்முடைய நெஞ்சார்ந்த நன்றி யையும் பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக் கின்றோம்.


பொதுவாக விடுதலைக்கும் தஞ்சை மாவட்டத் திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அதை பற்றி நிறைய செய்திகள் பேசிக்கொண்டே இருக்கலாம், முதன்முதலில் இந்த பத்திரிக்கை 1.6.1935அன்றுதான் வாரம் இருமுறை இதழாகதான் வெளிவந்தது. அப்போது இந்த பத்திரிக்கை நீதிக்கட்சியின் பத்திரிக் கையாகத்தான் இருந்தது. அப்போது அதனுடைய ஆசிரியர் சி.ஏ.வி நாதன், அதன்விலை அரையணா, அந்த பத்திரிக்கை தந்தைபெரியார் அவர்கள் கைவசம் வந்து, நாளேடாக மாறிய பிறகு அதனுடைய விலை காலணா, விடுதலைக்கு முதலில் சி.ஏ.பி.நாதன், சாமி.சிதம்பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, பண்டிதர் முத்துசாமிபிள்ளை, பொன்னம்பலனார், அன்னைமணியம்மையார் இவ்வளவு புகழ் பெற்ற வர்கள் ஆசிரியர்களாக ஒளி வீசினர்.  இவர்களைத் தொடர்ந்து 58 ஆண்டுகள் நமது தமிழர் தலைவர்


கி. வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக  இருந்து வருகிறார்.  ஒரு கொள்கை ஏடு, ஒரு லட்சிய ஏடு, ஒரு இயக்க ஏடு இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது என்றால் அதுவிடுதலையைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாக கூற முடியும். அதுமட்டு மல்ல விடுதலை நாளிதழ் அரசியலிலும் சமுதாயத் துறையில் மட்டுமல்ல, மிகப் பெரிய அளவிற்கு மாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது விடுதலையில் வெளிவரும் ஒரு பெட்டி செய்திகூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். 


பெட்டி செய்தியால் ஏற்பட்ட மாற்றம்


ஒரு முறை இந்தியன் வங்கியா? அக்ரகாரமா? என்ற தலைப்பில் விடுதலையில் வெளிவந்த கட்டுரை பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு சங்கராச்சாரி யார் மாவட்டம் என்று பெயர் சூட்டுவது உண்மையா? அப்படி என்றால் இதுதான் திராவிட இயக்க ஆட்சியின் சாதனையா? என்று பெட்டி செய்தி வெளிவந்தது, இந்த செய்தி செய்த மாற்றம் அந்த மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. அது மட்டுமல்ல எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த, இட ஒதுக்கீடு தொடர்பான வருமான உச்சவரம்பு சட்டத்தை 6 மாத காலம் தொடர்ந்து எதிர்த்து போராடி வந்த இயக்கம் திராவிடர் கழகம் தான், நம்முடைய தலைவர் ஆசிரியர் தான், நம்முடைய விடுதலை நாளேடு தான். அதன் விளைவாக அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக எம்.ஜி.ஆர் செய்தியாளர் சந்திப்பில் ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு பத்திரிக்கை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து என் னுடைய கட்சி, என்னுடைய ஆட்சி, இடஒதுக்கீடுக்கு எதிரானவை என்று நம்ப வைத்துவிட்டார்கள். மக்களும் அதனை ஏற்று எனக்கு எதிராக வாக்களித்து விட்டார்கள் என்று கூறி, பின்னர் அந்த வருமான வரம்பு ஆணையை ரத்து செய்தார். அதன்பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீத இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார் என்பதில் விடுதலைக்கு மிக முக்கிய பங்குண்டு.


தஞ்சையை சேர்ந்த நெடுமாறன் என்பவர் இளந்தமிழா புறப்படு போருக்கு என்று 1958-இல் ஒரு கட்டுரையை விடுதலையில் எழுதினார் அந்த கட்டுரையை வெளியிட்ட காரணத்திற்காக அன்றைய விடுதலையின் ஆசிரியர் அன்னைமணியம்மையார் அவர்களுக்கும், கட்டுரை எழுதிய நெடுமாறனுக்கும் ரூபாய் 100 அபராதமும், அதனைகட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும்வழங்கப்பட்டது. இப்படி பல செய்திகள் தஞ்சை மாவட்டத்திற்கும் விடுதலை நாளேட்டிற்கும் தொடர்பு உண்டு. இன்னும்  சொல்லப்  போனால் விடுதலை சந்தாக்களை அதிக அளவில் திரட்டி கொடுப்பதிலும் தஞ்சை மாவட்டம் தான் முதல் மாவட்டமாக இருக்கிறது. அதனால் தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரத்தநாட்டிற்கு பெரியார் நாடு என்று பெயர் வைத்த வரலாறெல்லாம் இருக்கிறது. தந்தை பெரியார்   அவர்களால் நமது ஆசிரியர் அவர்களிடத்தில் ஏக போகமாக ஒப்படைக்கப்பட்டு 'விடுதலை'யை இன்று அதிகப்படியான மக்களிடத்தில்  கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் நம்முடைய ஆசிரியர். தமிழன் இல்லம் என்று சொல்வதற்கு அறிவிப்பு பலகை போலஒவ்வொரு தமிழன் வீட்டிலும் விடுதலை நாளிதழ் இருக்க வேண்டும் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதையும் எடுத்துக்கூறி விடுதலை நாளிதழ் பற்றிய அது கடந்துவந்த வர லாற்று பாதைகளையும்எடுத்துக்கூறியும் விடுதலை இல்லை என்றால் நம் இனத்துக்கு விடுதலை இல்லை என்று பெருமிதமாக சிறப்புரை ஆற்றினார்.இறுதி யாக தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் நன்றியுரையாற்றினார்.


பங்கேற்று பேசிய மானமிகுவாளர்கள்


பேரா.நம்.சீனிவாசன், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர்தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில பக துனைத் தலைவர்கோபு.பழனிவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்டத் துனைத் தலைவர்முத்து. இராஜேந்திரன்மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, திருவையாறு ஒன்றிய தலைவர்ச.கண்ணன், பூதலுர் ஒன்றியத் தலைவர் அல்லூர்.பாலு, உரத்தநாடு ஒன்றிய செயலாளர்ஆ.லெட்சுமணன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் சுதாகர், பெரியார்நகர் அ.உத்திராபதி, உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன்பரசு, அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் காத்தையன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஏ.வி.என்.குணசேகரன், திருவெரம்பூர் தமிழ்ச் சுடர், மாரியப்பன்,  பிரான்ஸ் தங்க. ரமேஷ்,  பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.


கூட்டத்தில் கலந்து கொண்ட மானமிகுவாளர்கள்


மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட துணைச் செயலாளர் ச.சந்துரு, மாவட்ட ப.க தலைவர் ந.காமராசு, மாவட்ட ப.க செயலாளர் ச.அழகிரி, திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் அரங்கராசு, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில வீதி நாடக கலை க்குழஅமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, தஞ்சை அ.பெரியார் செல்வன், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, விருதுநகர் மாவட்ட செய லாளர் விடுதலை ஆதவன், திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசன், நாகை செந்தில் குமார், திருத்துறைபூண்டி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விருத்தாசலம் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் வெங்கட. ராசா, விருத் தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், வட மணபாக்கம் முனைவர் தமிழ் மொழி, அரக் கோணம் சோமசுந்தரம், காரைக்கால் அன்பழகன், பொன். பன்னீர்செல்வம், திருத்தணி அறிவுச்செல்வன், விழுப் புரம் சுரேஷ், தூத்துக்குடி புத்தன், மதுரை சின்னத்துரை, தமிழ் ஓவியா, வழக்கறிஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் மா.வீ.அருள்மொழி, சங்கர், செல்லத் துரை, திருவெறும்பூர் ஆறுமுகம், சிவாஜி, த. சரவ ணன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பெரியாரடி யான், அசோக்குமார், ஜனார்த்தனன், கோவிந்தசாமி, நெடுமாறன், செல்வராசு, ஆசிரியர் அ.செங் குட்டுவன், காரைக்குடி பழனி, விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு, குடந்தை மாவட்ட துணைச் செய லாளர் தமிழ்மணி, சென்னை விமல்ராஜ், பொன்.வெங்கடேசன், உள்ளிட்ட 100 கழகப் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர்கள் பங் கேற்று சிறப்பித்தனர் திருச்சி BHEL தொழிலாளரணி பொறுப்பாளர் ஆண்டிராஜ்  ஜூம்ஆப் காணொலியை ஒருங் கிணைத்தார்.


No comments:

Post a Comment