பால் தரமுடியாதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

பால் தரமுடியாதா

ராமன் வழக்கம் போல அன்று காலை பால் வாங்க கடைக்குப் போனார். வரிசையில் நின்று அவன் முறை வந்ததும் 200 மி.லி. பால் வாங்கினார்.உடனே வாங்கிய  பாலைக் கீழே ஊற்றிவிட்டு மீண்டும் வரிசையில் நின்றார்.


பால்காரர் மீண்டும் பால் கொடுத்தார்.  ராமன் மீண்டும் பாலைக் கீழே கொட்டிவிட்டு வரிசையில் நின்றார்.


பால்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. “ராமா...! நீ செய்வது சரியில்லை! பாலை வீணாகத் தரையில் கொட்டிவிட்டு மீண்டும் மீண்டும் வந்து பால் கேட்கிறாய். தரமுடியாது!” என்றார்.


“பால்காரரே...! பாலுக்குரிய பணத்தை நான் தருகிறேன். பால் கொடுக்க முடியாது எனச் சொல்ல உமக்கு உரிமை இல்லை. பாலைக் கொடுங்கள்” என்றார்.


பால்காரர் சலிப்புடன் மீண்டும் தந்தார். ராமனும் மீண்டும் பாலைக் கொட்டிவிட்டு வரிசையில் நின்றார்.


பால்காரர் கோபத்துடன், “இனி உனக்குப் பால் தரமுடியாது. பலருக்கு பயன்பட வேண்டிய பாலை, நீ அநாவசியமாக கீழே ஊற்றிக் கொண்டிருக்கிறாய். இனி அவ்வாறு செய்யமாட்டேன் என உறுதி அளித்தால் மட்டுமே  உனக்கு நான் பால் கொடுப்பேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.


ராமன் தனக்கு பின் வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருந்த கோயில் அர்ச்சகரை முன்னால் இழுத்து நிறுத்தி, “இவர் கூட தினமும் ஒரு லிட்டர் பாலை வாங்கிக்கொண்டு போய் அபிஷேகம் என்ற பெயரில்  வீணாக  கீழேதான் கொட்டுகிறார். இவரிடம் ஏன் கேள்வி கேட்காமல் தினமும் பாலை கொடுக்கிறாய்...?” என்று ஆவேசத்துடன் கேட்டார்.


வரிசையில் நின்றவர்கள் சிரிக்க, பால்காரரும் சிரிக்க, கடைசியில் அர்ச்சகரும் சேர்ந்து சிரித்து விட்டார்.


சிரித்து ஓய்ந்த சில நிமிடங்கள் கழித்து சிலர் சிந்திக்க ஆரம்பித்தனர்...


- ‘ஆறாம் அறிவு’ பேஸ்புக் பதிவிலிருந்து....


No comments:

Post a Comment