டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு. ஏனைய இடங்களில் ஜூன் 8 முதல் வர்த்தக வளாகங்கள், உணவு விடுதிகள் திறக்க படிப்படியாக அனுமதிப்பு.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- பொது முடக்கம் காரணமாக தமிழ் நாட்டில் வணிகம், கட்டுமானப்பணி, ஜவுளி, விவசாயம் என அனைத்தும் வெகு வாகப் பாதிக்கப்பட்டுள்ளன என இந்தூரில் உள்ள எல்.எப்.சி. என்ற வணிக கலந்தாய்வகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:
- இந்தியாவில் இதுவரை 15 பிரதமர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் அனைவரின் வாழ்க்கை வரலாறு உள்ளது. அதில் நேருவின் சுயசரிதை மிகச் சிறப்பானது. அவரை சிறுமைப் படுத்தும் பணியை தற்போதைய மோடி அரசு செய்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- யாருக்கான காவலாளி? என்ற தலைப்பில் மேனாள் நிதி அமைச்சர், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தின் இரு வழக்குகளைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதி உள்ளார்.
- கரோனா தொற்று தற்போது சமூகத் தொற்றாக பரவி யுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,75,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தொற்று தடுப்புப் பணியில் அரசின் செயல்பாட்டை விமர்சித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பி னர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள் ளனர். (பக்கம் 2)
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:
- கடந்த காலாண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் தரவுகளில் கூர்மையான திருத்தங்கள் தரவு தரத்தைப் பற்றி மீண்டும் சந்தேகம் எழுப்பியுள்ளன. தேசிய புள்ளி விவர அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) எந்த முறையை கையாண்டது என்பதை விளக்க வேண்டும் என்று சில பொருளாதார வல்லு நர்கள் கோரியுள்ளனர். ஆனால் புள்ளிவிவர அமைச்சகத்தின் அதிகாரிகள், நிறுவப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப இருப்பதாக விமர்சனங்களை நிராகரித்தனர்.
தி இந்து, சென்னை பதிப்பு:
- அமெரிக்க நாட்டின் மினியாபொலீஸ் நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர், கருப்பர் இனத்தைச் சேர்ந்த 46 வயது ஜார்ஜ் புளோயிட் கழுத்தில் தனது கால் முட்டியால் அழுத்திக் கொன்றதை அடுத்து, அமெரிக்காவில் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டும் மக்களின் கோபம் இன்னமும் தீரவில்லை. நிறவெறி இன்னமும் அமெரிக்காவில் நீங்கவில்லை.
- குடந்தை கருணா,
31.5.2020
No comments:
Post a Comment