தமிழ், தனித்தியங்க வல்லது. பிணத்தைச் சுமந்து கொண்டு நடக்க முடியுமா? பார்ப்பனர்களே கைவிட்ட செத்த மொழியைத் தமிழ் சார்ந்து நிற்குமா?
ஆனால், 17.5.2020 தினமணியின் 'தமிழ்மணி' என்ற பக்கத்தில், 'இந்த வாரம்' எனும் பகுதியில் தினமணி ஆசிரியர், ‘கலாரசிகன்’ எனும் பெயரில், தமிழால் சமசுகிருதத்தையும், சமசுகிருதத்தால் தமிழையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிட, அகற்றி நிறுத்தி விட இயலாது. பெருமைக்கு வேண்டுமானால் தனித்து இயங்குவதாகக் கூற முடியுமே தவிர, அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டால் அங்கு ஆங்கிலம் வந்து உட்கார்ந்து தமிழையும், சமஸ்கிருதத்தையும் ஒருசேர கபளீகரம் செய்து விடும் என நஞ்சினைக் கக்கியுள்ளார்.
சமசுகிருதத்தின் துணையின்றித் தமிழைப் பேச, எழுத முடியும். அப்படிச் சொன்னால் ஆங்கிலம் வந்து ‘கபளீகரம்’ செய்யும் என்பது முதலையின் கண்ணீர் ஆகும். இந்தி வந்து ‘கபளீகரம்’ செய்கிறதே! அதைத் தினமணி அய்யர் வசதியாக மறந்துவிட்டார், அல்ல... மறைத்துவிட்டார்.
பார்ப்பனர்களுக்கு எப்போதுமே தமிழின் தனித்தன்மைக்கு எதிரான அரிப்பு உண்டு.
சரி, பார்ப்பனர்களின் ரட்சகர் எனக் கருதப்பட்ட ராஜாஜி, தமிழ்மொழியில் பிற மொழியைக் கலந்து பேசுகிறவர்கள் குறித்து என்ன சொல்கிறார்?
"சோம்பேறிகளைப் பெற்ற தாய் அவதிப்படுவது போலத் தமிழ் அவதிப்படுகிறது" என்கிறார். இதை முந்தைய வார ஞாயிற்றுக்கிழமை தினமணி, தமிழ்மணி (10.5.2020) வெளியிட்டுள்ளது.
அப்படியானால், தமிழில் பிற மொழி கலந்து பேசுபவர்கள் குறித்த ராஜாஜியின் கடுஞ்சொல் அடைமொழிக்குத் தன்னைத் தகுதியானவர் என அடையாளப்படுத்திக் கொண்டார் தினமணி ஆசிரியர் என்பது உண்மைதானே?
- ஏ.கே.ஜெகதீசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தி.மு.க
No comments:
Post a Comment