உயரும் கரோனா பாதிப்பு - கவலைப்படாத துறை அமைச்சர்  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

உயரும் கரோனா பாதிப்பு - கவலைப்படாத துறை அமைச்சர் 

கே.எஸ்.அழகிரி கண்டனம்



சென்னை, மே 30  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று (29.5.2020) வெளியிட்ட அறிக்கை:  கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால்  தமிழகத் தில் இறப்பு விகிதம் 0.7% இருப்ப தாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக் கடி கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. 


கரோனா பாதிப்பு பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்க முயற்சிப் பது கண்டனத்திற் குரியது.


இத்தகைய செயல்களின் மூல மாக வேகமாக பரவி வரும் கரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடி யுமா என்கிற மிகப்பெரிய கேள்விக் குறி எழுந்துள்ளது.


இத்தகைய அவலநிலை யில் இருப்பதை உணர்ந்து போர்க் கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.


No comments:

Post a Comment