மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 31, 2020

மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 31 மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதிகரிப்பு என காங்கிரஸ் கட்சி குற்றச் சாட்டு.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகி யோர் நேற்று  (30.5.2020) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


கடந்த 6 ஆண்டுகால பாரதீய ஜனதா ஆட்சியில் மக்களின் கவனத்தை திசை திருப் புவதும், வெற்றுக்கூச்சல் எழுப்புவதும்தான் நடந்து உள்ளது. இதுதான் மோடி அரசின் நிர்வாக பாணியாக இருந்து வருகிறது. திறமையற்ற இந்த ஆட்சியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மோடியின் இரண்டாவது ஆட்சி காலத் தின் முதல் ஆண்டு நிறைவு பெற்று இருக் கிறது. இந்த ஓராண்டில் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் சந்தித்து உள்ளனர். இதயமற்ற அரசாங்கத்தால் மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள்.


ஆட்சிக்கு வந்த போது ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கு வோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018- ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு உள்நாட்டு மொத்த உற்பத்தி வெகுவாக குறைந்து இருக்கிறது.


இந்த ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகளும், அடிமட்டத்தில் உள்ளவர்களும் ஆதவற்ற நிலையில் இருக்கிறார்கள். 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருவாய் சமத்துவ மின்மை நிலவுகிறது. புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் அனுபவிக்கும் துயரங்கள் மோடி தலைமையின் தோல்வியை காட்டுகிறது.


விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாகும் என்று கூறினார். ஆனால் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 6 ஆண்டுகால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதி கரித்து இருக்கின்றன. சுயலாபத்துக்காக நாட்டின் நலன் தியாகம் செய்யப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் அதிக அளவில் உயிர்த்தியாகம் செய்து இருக்கிறார்கள்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


No comments:

Post a Comment