தந்தை பெரியார், டாக்டர் வரத ராஜூலு நாயுடு, ஆர்.கே.சண்முகம், திரு.வி.கலியாணசுந்தரம், ந.தண் டபாணிப் பிள்ளை முதலியோர் கூடி, ஒரு முக்கிய முடிவுக்கு வந்தனர்.
‘நமக்குள் அரசியல் பிரச்சி னையில் வெவ்வேறு கருத்து இருந் தாலும், சமூக சமத்துவத்தில் ஒரே கருத்துள்ளவர்களாக இருக்கிறோம் என்றும், இதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காகப் பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
பார்ப்பனர் அல்லாதார் வைதீ கச் சடங்குகள் என்று பெயர் வைத் துக்கொண்டு ஒவ்வொரு குடும் பத்திலும் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யப்படும் சடங்கு களை நிறுத்துவதற்கு முதன்முதலில் பிரச்சாரம் செய்யவேண்டும்.
தங்கள் தங்கள் பெற்றோர் களையும், மற்றோர்களையும் மோட்சத்திற்கு அனுப்புவது என்று பார்ப்பனர்களைக் கொண்டு திதி, திவசம் என்றோ, சிரார்த்தம் என்றோ சொல்லும்படியான பல வைதீகச் சடங்குகளைச் செய்வதில் ஒன்றும் பலன் இல்லையென்றும், அம்மாதிரிச் சடங்குகள் பார்ப்பனர் களின் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டதல்லாமல், வேறு அல்ல என்பதைப் பார்ப்பனர் அல்லா தார்க்குத் தெரிவிப்பதற்காக ஒரு பிரச்சாரம் ஆரம்பிப்பது என்றும், அதில் அப்பொழுது பேசிய அய் வரும் மற்றும் அதற்குச் சம்மதித்த வர்கள் பெயரையும் வெளியிட்டு வருவதென்றும் முடிவு செய்து, அதன்படியே தமிழ்நாடு பத்திரி கையில் ‘‘பிராமணியத்தை ஒழித்த வர்கள்'' என்ற தலைப்பின் கீழ் பல கனவான்களின் பெயர்களும் பிர சுரிக்கப்பட்டு இருக்கின்றன. இன் னமும் தெரியப்படுத்தும் கனவான் கள் பெயரும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டு வரப் படும். அதாவது, யார் ஒருவர் பார்ப்பனரைக் கொண்டாடினாலும், மற்றபடியானாலும் தாங்கள் செய் யும் திதியோ, திவசமோ, சிரார்த் தமோ அல்லது வேறு பல சடங்கு களால் இறந்துபோன தங்கள் பெற் றோர்களுக்கோ, மற்றோர்களுக்கோ ‘‘மேலுலகத்திற்குப்'' போய்ச் சேரும் என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. அவ்விதச் சடங்குகளில் நம்பிக்கையில்லை என்று யாருக்கு ஏற்படுகிறதோ, அவர்கள் தங்கள் பெயரைத் தெரியப்படுத்தினால் பத்திரிகையில் பிரசுரித்து வரப்பெறும்.
மேற்கூறிய பிரகாரம் பிராமணி யத்தை விரட்டியவர்கள் சிறீமான் கள்:
- டாக்டர் வரதராஜூலு நாயுடு ‘அசோக விலாஸ்', சேலம்.
- திரு.வி.கல்யாணசுந்தர முதலி யார், ‘நவசக்தி' ஆசிரியர், சென்னை.
- ஈ.வெ.இராமசாமி நாயக்கர், ‘குடிஅரசு' ஆசிரியர், ஈரோடு.
- ஆர்.கே.ஷண்முகஞ் செட்டி யார், ஹவார்டன், கோயமுத்தூர்.
- சனக சங்கர கண்ணப்பர், ‘திராவிடன்' ஆசிரியர், சென்னை.
- ந.தண்டபாணிப் பிள்ளை, 6-99. பவழக்கார தெருவு, சென்னை.
- ச.சொக்கலிங்கம் பிள்ளை, ‘தமிழ்நாடு' துணை ஆசிரியர், சென்னை.
- வெ.சுப்பையா பத்தர், 84, முதல் வீதி, இரங்கூன்.
- திரு.அ.மு.அ.அண்ணாமலை செட்டியார், ஆத்தங்குடி
- எம்.என்.முத்துக்குமாரசாமிப் பாவலர், பரோபகார சங்கத் தலை வர், மேல்பாதி, நெல்லிக்குப்பம்.
- எஸ்.இராமநாதன், காரியதரிசி, தமிழ் மாகாண அ.பா.சர்க்கார் சங்கம், ஈரோடு
- சா.இராமசாமி நாயக்கர், வியாபாரம், ஈரோடு.
- ஓ.சி.முத்துசாமிக் கவுண்டர், வியாபாரம், ஈரோடு.
- மணவை ரெ.திருமலைச்சாமி ‘குடிஅரசு' துணை ஆசிரியர், ஈரோடு.
(ஆதாரம்: ‘குடிஅரசு', 8.8.1926, பக்கம் 11)
94 ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட மேற்கண்ட முடிவு இன்றைக்கும் கூட தேவைப் படத்தானே செய்கிறது?
சிந்திப்பீர்!
- மயிலாடன்
No comments:
Post a Comment